Site icon Tamil News

பிரான்ஸில் TikTok செயலியால் ஏற்பட்டுள்ள பாதிப்பு!

பிரான்ஸில் குறுகிய வடிவ காணொளிகளை பதிவுகளாக கொண்ட TikTok சமூகவலைத்தளத்தினால் உடல்நலக்குறைவு ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அது தொடர்பில் பிரான்ஸில் செனட் மேற்சபை எச்சரிக்கை விடுத்துள்ளது. சிறுவர்களிடையே சிந்திக்கும் திறனை வெகுவாக கட்டுப்படுத்துகிறது எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

செனட் மேற்சபையினரின் பரிந்துரையின் பேரில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில், இந்த சுகாதார பிரச்சனைகள் ஏற்படுவது தெரியவந்துள்ளது.

பிரான்சில் 22 மில்லியன் பேர் TikTok தளத்தினை பயன்படுத்துகிறார்கள். குறிப்பாக 4 தொடக்கம் 18 வயதுடைய சிறுவர்கள் நாள் ஒன்றில் 2 மணிநேரத்தினை இதில் செலவிடுகிறார்கள்.

இந்த பயன்பாட்டினால் சிறுவர்கள் உளவியல் பாதிப்புக்கு உள்ளாகுவதாகவும், அவர்களது சிந்திக்கும் திறன் மழுங்கடிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, வாசிப்புத் திறன் குறைவடைந்து வருவதாகவும், சிறுவர்கள் ‘காணொளி’ மூலம் தரவுகளை உள்வாங்குவதினால் மூளை விருத்தியடைவது கணிசமாக குறைவடைந்துள்ளதாகவும் செனட் சபை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேவேளை, டிக்டொக் பயனாளர்கள் தங்கள் குறித்து போலியான பிம்பத்தை கட்டியெழுப்புவதாகவும், அதனை தொடர்ந்தும் தக்க வைக்க போராடுவதாகவும், இது மிகவும் ஆபத்தான செயற்ற்பாடு எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Exit mobile version