Site icon Tamil News

இலங்கை வந்த IMFஇன் குழுவினர் : முதலாவது மீளாய்வு ஆரம்பம்!

சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் முதலாவது மீளாய்வு இன்று (14.09) ஆரம்பமானது.

பரிசீலனையில் பங்கேற்பதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

அதன்படி, இன்று காலை ஆரம்பமான அமர்வில் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க கலந்துகொள்வதாக நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த மீளாய்வில் இலங்கைக்கான விரிவான கடன் வசதியின் இரண்டாம் தவணையைப் பெற்றுக்கொள்வது இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மையில் நம்பிக்கையை அதிகரிப்பதற்கு மிக முக்கியமான மைல்கல் என்று நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

இதன்படி 2024ஆம் ஆண்டில் எதிர்பார்க்கப்படும் பொருளாதார வளர்ச்சிக்கு நல்ல பாதை தயாராகும் என நிதியமைச்சர் தனது டுவிட்டர் கணக்கில் மீளாய்வு அமர்வு ஆரம்பிக்கும் முன்னர் குறிப்பிட்டிருந்தார்.

Exit mobile version