Site icon Tamil News

தமிழர்களிடம் 41 வருடங்களின் பின்னர் மன்னிப்புக் கோரிய அரசாங்கம்

83 ஆம் ஆண்டு இடம்பெற்ற கறுப்பு ஜுலைக் கலவரத்தினால் பாதிக்கப்பட்ட அனைத்து தமிழர்களிடமும் 41 வருடங்களின் பின்னர் அரசாங்கம் மன்னிப்புக் கோரியுள்ளது.

இவ்விடயம் குறித்து நாடாளுமன்றில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை உரையாற்றிய நீதி மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ, 83 கலவரம் நாட்டை இருண்ட யுகத்திற்கு அழைத்துச் சென்றதாகத் தெரிவித்தார்.

மேலும் தெரிவித்துள்ளதாவது,

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்த முஸ்லிம் சமூகத்தினரின் உடல்கள் எரிக்கப்பட்டமைக்காக மன்னிப்புக்கோரும் அமைச்சரவைப் பத்திரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நாம் அப்போது ஆட்சி செய்த அரசாங்கத்தில் அங்கம் வகிக்காவிட்டாலும், நாம் அம்மக்களிடம் மன்னிப்புக் கோர வேண்டும்.

அதேபோன்று, 41 வருடங்களுக்கு முன்னர் இந்நாட்டை கறுப்பு யுகத்திற்கு அழைத்துச் சென்ற, 83 கலவரம் நடைபெற்றது.

இதனால், நாட்டிலுள்ள தமிழ் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டார்கள். அப்போதைய காலக்கட்டத்தில் நாம் அரசியலில் இல்லாவிட்டால்கூட, பாதிக்கப்பட்ட ஒவ்வொரு தமிழர்களிடம் மன்னிப்புக்கோர நாம் இவ்வேளையில் கடமைப்பட்டுள்ளோம்.

இதனால்தான் இவ்வேளையில், நாம் தமிழர்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறோம் என அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

Exit mobile version