Site icon Tamil News

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை அதிரடியாக பணிநீக்கம் செய்த கூகுள் நிறுவனம்!

இஸ்ரேலிய அரசாங்கத்திற்கு AI மற்றும் கிளவுட் சேவைகளை வழங்குவதற்காக கூகுள் நிறுவனம் அமேசன் நிறுவனத்துடன் $1.2bn அமெரிக்க டொலர்கள் கூட்டு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில் குறித்த ஒப்பந்தத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட 28 ஊழியர்களை கூகுள் நிறுவனம் அதிரடியாக பணிநீக்கம் செய்துள்ளதாக  Bloomberg செய்தி வெளியிட்டுள்ளது.

ப்ராஜெக்ட் நிம்பஸ் என்று பெயரிடப்பட்ட இந்த ஒப்பந்தம் தொடர்பாக கடந்த செவ்வாய்க்கிழமை நியூயார்க் நகரம், சியாட்டில் மற்றும் கலிபோர்னியாவில் உள்ள கூகுள் அலுவலகங்களில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இதனையடுத்தே ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இருப்பினும் இவ்வாறு பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்கள் மற்ற ஊழியர்களின் பணிகளுக்கு இடையூறு விளைவித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் பணிநீக்கம் செய்யப்பட்டவுடன் போராட்டகாரர்கள் அவ்விடத்தில் இருந்து வெளியேறியதாக தொழிலாளி ஒருவர் ப்ளும்பெர்க் செய்தி சேவையிடம் தெரிவித்துள்ளார்.

Exit mobile version