Site icon Tamil News

இலங்கையின் இலக்கு இதுதான் : நிதி இராஜாங்க அமைச்சர் வெளியிட்ட தகவல்!

இலங்கை அண்மைக்காலமாக எதிர்கொண்டுள்ள மிகவும் சவாலான பொருளாதாரப் பிரச்சினை கடன் மறுசீரமைப்பு என நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு இதுவரை பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும், ஜூன் மாதத்திற்குள் முழு கடன் மறுசீரமைப்பையும் நிறைவு செய்வதே இலக்கு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, வெளிநாட்டுக் கடன் பலதரப்பு மற்றும் இருதரப்புக் கடன் என இரு பகுதிகளைக் கொண்டுள்ளதாகக் குறிப்பிட்ட சியம்பலாபிட்டிய, பலதரப்புக் கடன் தொடர்ச்சியாக செலுத்தப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், இருதரப்பு வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகள் மிகவும் வெற்றிகரமாக நடைபெற்று வருவதாகவும், நாடுகளுக்கு இடையிலான கடன் தொடர்பான பேச்சுவார்த்தைகளை மார்ச் மாத இறுதிக்குள் முடிக்க முடியும் எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் இங்கு குறிப்பிட்டுள்ளார்.

ஏப்ரலுக்குள் இறையாண்மை பத்திரங்கள் தொடர்பான கலந்துரையாடல்களையும் ஜூன் மாதத்திற்குள் கடன் மறுசீரமைப்பு தொடர்பான கலந்துரையாடலையும் நிறைவு செய்வதே இலக்கு என நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய மேலும் தெரிவித்தார்.

Exit mobile version