Site icon Tamil News

இன்று இலங்கை வருகிறார் பிரான்ஸ் ஜனாதிபதி!

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் இன்று (28.07) இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.

பிரான்ஸ் ஜனாதிபதி இன்று பிற்பகல் இலங்கை வருவார் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தனது பப்புவா நியூ கினியா விஜயத்தின் போது இந்த நாட்டிற்கு விஜயம் செய்ய திட்டமிட்டிருந்தார்.

இந்த விஜயத்தின் போது பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் இருதரப்பு கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளன.

பிராந்திய மற்றும் உலகளாவிய சவால்கள் குறித்து இதன்போது கவனம் செலுத்தப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பிரான்ஸ் ஜனாதிபதி ஒருவர் இலங்கைக்கு விஜயம் செய்வது வரலாற்றில் இதுவே முதல் தடவை என்பதும் விசேட அம்சமாகும்.

இதேவேளை, ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர்  யோஷிமாசா ஹயாஷி உள்ளிட்ட ஜப்பானிய அரசாங்கத்தின் தூதுக்குழுவினர் இன்று இலங்கைக்க  விஜயம் செய்யவுள்ளனர்.

ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் உட்பட 24 பேர் கொண்ட குழுவொன்று இரண்டு நாள் விஜயமாக இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஜப்பானிய அரசாங்கத்தின் இணைத் தலைமையின் கீழ் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் தொடர்பில் கலந்துரையாடுவதே ஜப்பானிய வெளிவிவகார அமைச்சரின் இலங்கை விஜயத்தின் நோக்கமாகும்.

Exit mobile version