Site icon Tamil News

உலகின் மிகச்சிறந்த நூறு நகரங்களின் பட்டியலில் முதல் இடம் பிடித்த பிரான்ஸ் தலைநகர்

உலகின் மிகச்சிறந்த நூறு நகரங்கள் கொண்ட பட்டியலில் பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் முதலிடத்தை பிடித்துள்ளது.

ஆண்டுதோறும் தயாரிக்கப்படும் Euromonitor International’s Top 100 City Destinations பட்டியலில் இந்த ஆண்டு பாரிஸ் முதலிடத்தை பிடித்துள்ளது.

பொருளாதாரம், வியாபார திறன், சுற்றுலாத்துறை, சுற்றுலாத்துறைக்கான கட்டுமானம், சுற்றுலாத்துறைக்கான அரச செயற்திட்டங்கள், சுகாதாரம், பாதுகாப்பு, ஸ்திரத்தன்மை உள்ளிட்ட காரணங்களை அடிப்படையாக கொண்டு இந்த பட்டியல் தயாரிக்கப்படுகிறது.

இந்த பட்டியலில் முதலாவது இடத்தினை பாரிஸ் பிடித்துள்ளது. தொடர்ச்சியான மூன்றாவது ஆண்டாக இதனை பாரிஸ் தக்க வைத்துள்ளது.

இரண்டாவது இடத்தினை டுபாயும் மூன்றாவது இடத்தினை மட்ரிட் நகரமும் பிடித்துள்ளது. சென்ற ஆண்டு நான்காவது இடத்தில் இருந்த லண்டன் நகரம் இம்முறை பத்தாவது இடத்துக்குச் சென்றுள்ளது. நான்காவது இடத்தில் ஜப்பானின் டோக்யோ நகரம் உள்ளது.

ஐந்தாவது இடத்தில் நெதர்லாந்தின் Amsterdam நகரமு, ஆறாவது இடத்தில் பெர்லின், ஏழாவது இடத்தில் ரோம், எட்டாவது இடத்தில் நியூயோர்க், ஒன்பதாவது இடத்தில் பர்சிலோனாவும் உள்ளது.

Exit mobile version