Site icon Tamil News

சூர்யா 44 படத்தில் சூர்யாவின் லுக் பார்த்தீங்களா?

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் ’சூர்யா 44’ படத்தின் படப்பிடிப்பு இன்று அந்தமானில் ஆரம்பித்தது. அந்தமானில் உள்ள போர்ட் பிளேர் துறைமுகத்தில் அதிரடியான ஆக்ஷன் காட்சிகளை படமாக்க கார்த்திக் சுப்புராஜ் திட்டமிட்டுள்ளார்.

இந்த நிலையில், அந்த படத்தில் சூர்யா எவ்வாறான தோற்றத்தில் வரப் போகிறார் என்கிற ஃபர்ஸ்ட் ஷார்ட் வீடியோவை தற்போது கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்டுள்ளார்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் சூர்யா 44 படம் தொடங்கியுள்ளது.

தற்போது வெளியாகியுள்ள சூரிய 44 படத்தின் ஃபர்ஸ்ட் ஷார்ட் வீடியோவில் திரும்பியபடி அமர்ந்திருக்கும் சூர்யா தனது முகத்தை மிகவும் நெருக்கமாக ஜூமில் காட்டி கதிகலங்க வைக்கிறார்.

இதில், ரோலக்ஸ் பிரெஞ்சு பியர்ட் வைத்தது போல இருக்கிறதே என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

நடிகர் சூர்யாவை இந்த கலர் கலரான உடையில் ரசிகர்கள் பார்த்ததும் வாரணம் ஆயிரம் சூர்யா போல மீசையே இல்லாத லுக்கில் முகத்தை காட்டுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பிரெஞ்சு பியர்ட் வைத்து வித்தியாசமான லுக்கில் சூர்யா காட்சி தந்துள்ளார். கார்த்திக் சுப்புராஜ் ஸ்டைலில் உருவாகி வரும் படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் குட் பேட் அக்லி படத்துடன் மோதும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Exit mobile version