Tamil News

TV-யில் செய்தி வாசிக்கும் போது மயங்கி விழுந்த பெண் செய்தி வாசிப்பாளர் …வெப்ப அலையால் அதிர்ச்சி!

மேற்கு வங்கத்தில் தூர்தர்ஷனில் செய்தி வாசித்துக் கொண்டிருந்த போது பெண் செய்தி வாசிப்பாளர் மயங்கி விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்கத்தில் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றுபவர் லோபமுத்ரா சின்ஹா. அவர் செய்தி வாசிக்கும் போது மயங்கி விழுந்ததாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக லோபமுத்ரா சின்ஹா தனது ஃபேஸ்புக்கில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில்,” பெங்காலியில் இருந்து செய்திகளை ஆங்கிலத்திற்கு மொழிபெயர்ர்த்துக் கொண்டிருந்தேன். அந்த செய்தியைப் படிக்க முயன்ற போது கண்கள் இருண்டன. இதன் பிறகு எதையும் பார்க்க முடியவில்லை. சிறிது நேரத்தில் சுயநினைவை இழந்தேன்.அப்போது என் இரத்த அழுத்த அளவு குறைந்து விட்டது. இதன் காரணமாகத்தான் நான் மயக்கமடைந்தேன். நான் சில நாட்களாக உடல்நலமில்லாமல் இருந்துதேன். கொஞ்சம் தண்ணீர் குடித்தால் சரியாகி விடும் என்று நினைத்திருந்தேன்.

தொலைக்காட்சி நிலையத்தில் மயங்கி விழுந்த லோபமுத்ரா சின்ஹா

நான் நிமிட செய்திகளாக இருக்கட்டும் அல்லது அரைமணி நேரமாக இருக்கட்டும். தண்ணீர் குடிக்காமல் செய்திகளை வாசித்து விடுவேன். ஆனால், நேற்று அந்த நேரத்தில் என்னால் தண்ணீர் குடிக்க முடியவில்லை. நீண்ட நேரம் தண்ணீர் குடிக்காமல் செய்திகளைப் படிக்க நேர்ந்ததால் தான் இந்த பிரச்சினை எழுந்தது. தற்போது எந்தப் பிரச்சினையும் இல்லை” என்று பதிவிட்டுள்ளார்.

தூர்தர்ஷனின் மேற்கு வங்கக் கிளையில் பணிபுரியும் லோபமுத்ரா சின்ஹா, தனது உடல்நிலை குறித்து வெளியிட்டுள்ள இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. மேற்கு வங்கத்தில் தற்போது வெப்ப அலை எச்சரிக்கை அமலில் உள்ளது. பல இடங்களில் 40 டிகிரிக்கும் மேல் வெயிலின் அளவு உள்ளது.

வயதானவர்கள், முதியவர்கள் வெளியே வரவேண்டாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், செய்தி வாசித்துக் கொண்டிருந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் மயங்கி விழுந்த சம்பவம், வெயிலின் கொடூரத்தை வெளிப்படுத்தியுள்ளது.

Exit mobile version