Site icon Tamil News

எலிசபெத் மகாராணியை கொல்ல மேற்கொள்ளப்பட்ட சதித் திட்டம் குறித்து வெளிப்படுத்திய எஃப்பிஐ!

எலிசபெத் மகாராணியை கொலை செய்வதற்காக தீட்டப்பட்ட சதித் திட்டம் குறித்த திடுக்கிடும் தகவல்களை எவ்பிஐ வெளியிட்டுள்ளது.

1983ம் ஆண்டு அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டவேளை பிரிட்டிஸ் மகாராணி உயிராபத்துக்களை எதிர்கொண்டார் என எவ்பிஐ வெளியிட்டுள்ள ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகாராணியாரின் அமெரிக்க விஜயத்தின்போது, அவர் உயிர் ஆபத்துக்களை எதிர்கொண்டுள்ளதாக அங்கிருந்த பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு தகவல் கிடைத்துள்ளதாக அந்த ஆவணத்தில் கூறப்பட்டுள்ளது.

image credits sky news 

அதாவது, வட அயர்லாந்தில் உள்ள மதுபான சாலைக்கு அடிக்கடி சென்ற நபர் ஒருவர் மூலம் தான் மகாராணியார் உயிர் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டிருந்தாக பொலிஸ் அதிகாரி எவ்பிஐயிடம் கூறியுள்ளார்.

வடஅயர்லாந்தில் ரப்பர் புல்லட்டினால் கொல்லப்பட்ட தனது மகளிற்காக பழிவாங்கப்போவதாக அந்த நபர் தெரிவித்தார் என அந்த அதிகாரி எவ்பிஐஎஜன்ட்களிற்கு தெரிவித்துள்ளார்.

image credits sky news 

எலிசபெத் மகாராணி அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொள்வதற்கு ஒரு மாதத்திற்கு முன்னர் பெப்ரவரி நான்காம் திகதி ( 1983)இந்த அச்சுறுத்தல் வெளியாகியுள்ளது.

எலிசபெத் மகாராணிக்கு உயிர் ஆபத்து ஏற்படுவதை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்ட எவ்பிஐ படகு நெருங்க கோல்டன் கேட் பாலத்தின் நடைபாதைகளை மூடுவதற்கு திட்டமிட்டது என எவ்பிஐ ஆவணங்கள் தெரிவித்துள்ளன.

 

Exit mobile version