Site icon Tamil News

சிங்கப்பூரில் கட்டுமான ஊழியருக்கு நேர்ந்த கதி – உரிமையாளருக்கு சட்ட நடவடிக்கை

சிங்கப்பூரில் கட்டுமான ஊழியர் சுகயீனமடைந்ததன் காரணமாக நிறுவனத்தின் இயக்குனர் ஒருவருக்கு 22 வார சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வேலையிடத்தில் காணப்பட்ட பல பாதுகாப்பு குறைபாடுகள் காரணமாக ஊழியருக்கு கடுமையான காயம் ஏற்பட்டதாக சொல்லப்பட்டுள்ளது. கட்டுமான நிறுவனமான Ossis இன் ஒரே இயக்குநரான Denny Nasution Chng என்பவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வேலையிடத்தில் சிறந்த பாதுகாப்பு மற்றும் சுகாதார கட்டமைப்பை உருவாக்கி செயல்படுத்துவதற்கு முழு பொறுப்பு Chng தான் என்று மனிதவள அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஆனால், அதனை அவர் செய்ய தவறியதால் ஊழியருக்கு கடும் காயம் ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

2021 ஆம் ஆண்டு மார்ச் 4 அன்று, இரண்டு ஊழியர்கள் கட்டடத்தின் இரண்டாவது மாடியின் சுவரில் உள்ள விரிசல்களுக்கு வெள்ளை பூச்சு பூசும் வேலையை செய்து கொண்டிருந்தனர்.

மதியம் 2 மணியளவில் பூச்சு பூசுவதை முடித்துவிட்டு, அது உலரும் வரை அவர்கள் தற்காலிகமாக வேலையை நிறுத்தி காத்திருந்தனர். அப்போது ஒருவர் மட்டும் அருகில் இருக்கும் சூப்பர் மார்க்கெட் கடைக்கு சென்றுள்ளார், பின்னர் 15 நிமிடம் கழித்து வந்து பார்த்தபோது முதல் தளத்தில் சக ஊழியர் குப்புறக்கிடந்துள்ளார்.

பின்னர் அந்த ஊழியர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு கடுமையான மூளைக் காயம் இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் அவர் படுத்த படுக்கையில் இருப்பதாகவும், பேசவும் முடியவில்லை என்றும் சொல்லப்பட்டுள்ளது.

இதனை அடுத்து நடத்திய விசாரணையில், Ossis பல வேலையிட பாதுகாப்பு விதிகளை மீறியது தெரியவந்தது.

Exit mobile version