Site icon Tamil News

கொழும்பு வைத்தியசாலையில் மருந்து ஒவ்வாமையினால் யுவதிக்கு நேர்ந்த கதி

கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலையில் 23 வயதுடைய யுவதியொருவர் மருந்து ஒவ்வாமியால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 27 அன்று சந்தேகத்திற்கிடமான தொற்றுக்காக பாதிக்கப்பட்ட யுவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.சிகிச்சையின் போது, ​​நோயாளிக்கு வாய்வழி மருந்து கொடுக்கப்பட்ட பலனளிக்காததால் மருத்துவர்கள் அதே மருந்தை தடுப்பூசி வடிவில் கொடுத்துள்ளனர்.இதனையடுத்து யுவதிக்கு ஒவ்வாமை ஏற்பட்டதாக மருத்துவமனையின் தலைவர் தெரிவித்துள்ளார்.

யுவதிக்கு கடுமையான ஒவ்வாமை எதிர்வினை ஏற்பட்ட நிலையில்,உடனடியாக அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.எனினும் அவர் உயிரிழப்பதற்கு முன்னர் கிட்டத்தட்ட எட்டு மணி நேரம் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றதாக வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் எஸ்.லியனகே ரணவீர தெரிவித்துள்ளார்.

அதேசமயம் யுவதியின் மரணத்தைத் தொடர்ந்து, குறிப்பிட்ட மருந்தின் முழுத் தொகுதியும் சுகாதார அமைச்சினால் திரும்பப் பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இலங்கையில் பயன்படுத்தப்படும் மருந்துகளின் தரம் குறித்து பல மருத்துவ நிபுணர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், இதுபோனற சம்பவங்கள் சர்ச்சையை கிளப்பியுள்ளன.

Exit mobile version