Site icon Tamil News

ஜெர்மனிக்கு தப்பி செல்ல முயன்ற தமிழருக்கு நேர்ந்த கதி

கொலை மிரட்டல், மோசடி வழக்குகளில் தஞ்சை காவல் துறையால் தேடப்பட்டு வந்த நபர் ஜெர்மன் தப்பிச்செல்ல முயன்ற போது கைது செய்யப்பட்டார்.

தஞ்சாவூரை சேர்ந்த ஸ்ரீராம் ராஜகோபால் வயது 34 இவர் மீது கடந்த பிப்ரவரி மாதம் தஞ்சை காவல் நிலையத்தில் கொலை மிரட்டல், நம்பிக்கை மோசடி, தகாத வார்த்தைகளால் திட்டுதல் உள்ளிட்ட பிரிவுகளில் நான்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

இதை அறிந்த ஸ்ரீராம் ராஜகோபால் தலைமறைவு ஆகிவிட்டார். இதையடுத்து தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தார்.

அதோடு அனைத்து சர்வதேச விமான நிலையங்களுக்கும் எல்ஓசியும் அனுப்பி வைத்தார். இந்நிலையில் நள்ளிரவு சென்னையில் இருந்து ஜெர்மன் நாட்டின் பிராங்க்பர்ட் நகருக்கு செல்லும் லுப்தான்சா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் ஸ்ரீராம் ராஜகோபால் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல முயற்சித்துள்ளார்.

அதற்கமைய, சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தார் அவரது ஆவணங்களை பரிசோதித்த அதிகாரிகள் ஸ்ரீராம் ராஜகோபால் தேடப்படும் குற்றவாளிகள் என தெரிந்து அவரது பயணத்தை ரத்து செய்தனர்.

மேலும் காவல்துறைக்கு அளித்த தகவலின் பெயரில் தஞ்சையிலிருந்து தனிப்படை சென்று அவரை கைது செய்து தஞ்சாவூர் கொண்டு வந்தனர்

Exit mobile version