Site icon Tamil News

பொலன்னறுவையில் ஆறு வருடங்களாக பதுக்கிவைக்கப்பட்டிருந்த மருந்து பொருட்கள் அழிப்பு!

இலங்கை மருத்துவ துறை மருந்து பொருட்கள் பற்றாக்குறையால் கடும் நெருக்கடியை சந்தித்து வரும் நிலையில்,  பொலன்னறுவையில் பல மில்லியன் ரூபாய் பெறுமதியான காலாவதியான மருந்துகள் அழிக்கப்பட்டுள்ளன.

பொலன்னறுவை மாவட்டம் மனம்பிட்டிய கிராமிய வைத்தியசாலையில் சுமார் ஆறு வருடங்களாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த காலாவதியான மருந்துகளே இவ்வாறு அழிக்கப்பட்டுள்ளன.

கடந்த 2017ஆம் ஆண்டுக்கு பின்னர் இரண்டு விடுதிகளில் மில்லியன் கணக்கான மருந்துகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக சுகாதார திணைக்களத்திற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பிரகாரம் மருந்துப் பொருட்கள் கையிருப்பு அழிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் மருந்து தட்டுப்பாடு நிலவி வரும் இவ்வேளையில், 2017ஆம் ஆண்டு இந்த மருந்துகளை வழங்காமை தொடர்பில் உடனடி விசாரணை நடத்தி அவற்றை நிறுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

Exit mobile version