Site icon Tamil News

Ai தொழில்நுட்பத்தால் ஏற்பட்டுள்ள ஆபத்து – மக்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி

உலகில் சுமார் 27% வேலைகள் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தால் தானியங்கி மயமாக மாற்றப்படும் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

OECD எனப்படும் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பினால் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

OECD என்பது 38 உறுப்பினர்களைக் கொண்ட குழுவாகும். இதில் பெரும்பாலும் செல்வந்த நாடுகளே இணைந்து இருக்கிறது. ஆனால் மெக்சிகோ மற்றும் எஸ்டோனியா போன்ற சில வளர்ந்து வரும் நாடுகளும் இதில் இருக்கிறது. இதுவரை ஏஐ தொழில்நுட்பத்தால் பிறருடைய வேலையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியது போல் தெரியவில்லை என்றாலும், இந்தத் தொழில்நுட்பம் தன்னுடைய ஆரம்ப கட்டத்தில்தான் இருக்கிறது என OECD குறிப்பிட்டுள்ளது.

இந்த OECD-ல் இணைந்துள்ள இணைந்துள்ள நாடுகளில் 27% வேலைகள் அதிக ஆபத்தில் இருப்பதாகவும், தொழிலாளிகளுக்கு பதிலாக அனைத்தும் தானியங்கி மயமாக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. நாம் தற்போது நினைத்துக் கொண்டிருக்கும் 100 முக்கிய திறன்களில் சுமார் 25 திறன்கள் ஆட்டோமேட்டிக் சிஸ்டமாக மாற்றப்படும் என்கின்றனர்.

முதல் ஏழு OECD நாடுகளில், உற்பத்தி மற்றும் நிதி சார்ந்த 2000 நிறுவனங்களில், 5300 தொழிலாளர்களிடம் ஆய்வு செய்ததில், தற்போது பணியாற்றும் ஐந்தில் மூன்று பேர் அடுத்த 10 ஆண்டுகளில் தங்களின் வேலையை Ai பறித்துவிடுமோ என்று அஞ்சுவதாக, OEDC கடந்த ஆண்டு எடுத்த கணக்கெடுப்பில் கண்டறிந்தது. இந்த ஆய்வு ChatGPT வெளிவருவதற்கு முன்பே நடத்தப்பட்டது. ChatGPT வெளிவந்த பிறகு நம்மில் பலருக்கும் நமது வேலை எதிர்காலத்தில் பறிபோய் விடுமோ என்ற அச்சம் வந்திருக்கும்.

ஏற்கனவே AI துறை சார் பணிகளில் இருப்பவர்களில் மூன்றில் இரண்டு தொழிலாளர்கள், ஆட்டோமேஷன் தங்களின் வேலையை கடினமானதாகவும், நிச்சயமில்லாததாகவும் மாற்றி விட்டதாகக் கூறுகின்றனர். இது நம்முடைய எதிர்காலப் பணியை எந்த அளவுக்கு பாதிக்கிறது என்பது, நாம் எஐ தொழில்நுட்பத்தில் எடுக்கும் கொள்கை நடவடிக்கைகளைப் பொறுத்ததாகும்.

அரசாங்கமும் தொழில் நிறுவனங்களும், புதிய மாற்றங்களை மக்கள் ஏற்றுக் கொள்ளும் வகையில் உதவ வேண்டும். அப்போதுதான் Ai தொழில்நுட்பத்தால் உருவாகும் வாய்ப்புகளின் மூலம் நாம் பயனடைய முடியும். குறைந்தபட்ச ஊதியம் மற்றும் சரியான ஊதியத்தை பேரம் பேசுதல் ஆகியவை, நம் பணியில் இந்தப் புதிய தொழில்நுட்பம் செலுத்தக்கூடிய அழுத்தத்தை குறைக்க உதவும்.

அதேநேரம் அரசாங்கமும், தொழிலாளர்களின் உரிமைகள் பறிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என OECD தன் அறிக்கையின் வாயிலாகத் தெரிவித்துள்ளது.

Exit mobile version