Site icon Tamil News

நாட்டின் தற்போதைய நிலைமை கவலைக்குரியது – சந்திம வீரக்கொடி

நாட்டின் தற்போதைய நிலைமை கவலைக்குரியது என பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் எதிர்க்கட்சியின் உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று  (24) இடம்பெற்ற பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவை பதவி நீக்குவதற்கான பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர்  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்து தெரிவித்த அவர்,  நாட்டின் தற்போதைய நிலையையிட்டு கவலையடைய வேண்டும்.ஒரு தரப்பினரின் நோக்கத்துக்கு அமைய செயற்படாத காரணத்தால் சுயாதீன ஆணைக்குழுக்களின் சுயாதீன தன்மை கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவே ஜனக ரத்நாயக்கவை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவராக நியமித்தார்.

ஜனக ரத்நாயக்கவின் தகைமையை தொடர்பில் கேள்வியெழுப்பும் தரப்பினர் ஏன் ஆரம்பத்தில் அது தொடர்பில் அவதானம் செலுத்தவில்லை.

நாட்டு மக்களின் ஜனநாயகத்தை இல்லாதொழிப்பதற்காகவே ஒரு சில ஆணைக்குழுக்களுக்கு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவை சிறந்த உதாரணமாக குறிப்பிட வேண்டும்.தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினர் சார்ள்ஸ் தேர்தலை பிற்போடும் அரசாங்கத்தின் நோக்கத்துக்கு சார்பாகவே செயற்பட்டார் எனத் தெரிவித்துள்ளார்.

Exit mobile version