Site icon Tamil News

ஜெர்மனியில் ஏற்பட்டுள்ள நெருக்கடி- சமூக உதவி பணம் பெறுபவர்களுக்கு சிக்கல்

ஜெர்மன் அரசாங்கம் கடும் நெருக்கடியான நிலைமையை எதிர்கொண்டு வருவதாக செய்தி வெளியாகியுள்ளது.

கொவிட் காலங்களில் 60 மில்லியன் யூரோக்களை மேலதிக கடனாக பெறுவதாக முடிவு எடுத்து இருந்தது. தற்பொழுது இந்த கடனை பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த 60 மில்லியன் யுரோ மேலதிக கடன் பெற்றுக் கொள்வதற்கு எதிராக பிரதான வலது சாரி தீவிரவாத கட்சியானது உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளது. கடந்த கிழமை உச்ச நீதிமன்றமானது இந்த வழக்கில் ஒரு தீர்ப்பை வழங்கி இருந்ததது.

இந்நிலையில் 60 மில்லியன் யுரோவை எவ்வாறு ஈடு செய்வது என்ற கேள்வி எழுந்துள்ளது. அதாவது எதிர் வரும் வருடம் சமூக உதவி பணத்தில் பாரிய அதிகரிப்பு ஏற்படும் நிலையில் அரசாங்கம் மேலதிக கடன்களை பெறவேண்டிய சூழ்நிலை உள்ளது.

இந்நிலையில் தற்பொழுது ஆளும் கூட்டு கட்சியின் மற்றுமொரு பங்காளி கட்சி சமூக கொடுப்பனவுகளை உடனடியாக அரசாங்கமானது குறைத்தல் வேண்டும் என்ற வேண்டுதலை விடுத்து இருக்கின்றது.

Exit mobile version