Site icon Tamil News

தன்னை செருப்பால் அறைந்து கொண்ட கவுன்சிலர்

அனகாபல்லி மாவட்டத்தில் உள்ள நர்சிபட்டினம் நகராட்சி கவுன்சில் கூட்டத்தில் தெலுங்கு தேசம் கட்சி (டிடிபி) கவுன்சிலர் ஒருவர் தன்னை செருப்பால் அறைந்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியது.

20வது வார்டு கவுன்சிலர் மூலபர்த்தி ராமராஜூ, லிங்கபுரத்தில் மக்கள் சந்திக்கும் பிரச்னைகள், குறிப்பாக சாலை பிரச்னைக்கு தீர்வு காண முடியவில்லை என வேதனை தெரிவித்தார்.

அவைத்தலைவர் போடப்பட்டி சுப்பலட்சுமி தலைமையில் நடந்த கவுன்சில் கூட்டத்தில், ராமராஜூ, செருப்பை எடுத்து வந்து தனது கன்னத்தில் அறைந்துகொண்டார்.

பேரவைத் தலைவர் மற்றும் ஆணையரின் கவனத்திற்கு பலமுறை எடுத்துச் சென்றும் சாலை பிரச்னைக்கு தீர்வு காணாதது குறித்து அவர் வேதனை தெரிவித்தார்.

2022 டிசம்பரில் சாலை பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக எம்எல்ஏ பெட்லா உமாசங்கர் கணேஷ் உறுதியளித்ததாகவும், ஆனால் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என்றும் ராமராஜு மேலும் தெரிவித்தார்.

30 மாதங்கள் கவுன்சிலராக இருந்தும், தனது அதிகார வரம்பிற்குள் எந்த ஒரு வளர்ச்சிப் பணியையும் நிறைவேற்ற முடியாமல் போனதற்கு ஆழ்ந்த வருத்தம் தெரிவித்தார்.

Exit mobile version