Site icon Tamil News

சீனாவின் ஆய்வகத்தில் இருந்தே கொரோனா வைரஸ் பரவியிருக்கலாம் – பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் கருத்து!

கொரோன வைரஸ் தொற்றானது சீனாவின் ஆய்வகத்தில் இருந்தே கசிந்துள்ளதாக பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் பொரிஸ் ஜேன்சன் குற்றம் சாட்டியுள்ளார்.

அவருடைய நினைவுக் குறிப்பில் இருந்து இந்த தகவல் பெறப்பட்டதாக சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கொரோனா தொற்றின் காரணமாக உலக அளவில் சுமார் 07 மில்லியன் மக்கள் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக பிரித்தானியாவில் பாரிய அளவில் இழப்புகள் பதிவாகியிருந்தன.

அந்நேரத்தில் இவர் பிரதமாராக இருந்த நிலையில், துரதிஷ்டவசமான இறப்புக்களை தடுக்க தவறியதன் காரணமாக இவர் மீது பல குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்பட்டிருந்தன.

வைரஸின் தோற்றம் பற்றி சுத்தமாக வர சீன அரசாங்கத்தின் மீது புதிய அழுத்தத்தைக் குவிக்கும் கருத்துக்களில் இவருடைய கருத்துக்களும் வந்துள்ளன.

‘சீன ஆய்வகத்தில் சில தவறான பரிசோதனையின் விளைவாக இந்த பிறழ்வு ஏற்பட்டிருக்கலாம் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்துகின்ற நிலையில் பொரிஸ்ஜோன்சனின் இந்த கருத்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version