Tamil News

பிரச்சனைக்கும் பஞ்சமே இல்லாத அளவிற்கு சண்டை தாறுமாறாக இருக்கப் போகிறது….

ஒவ்வொரு வருடமும் எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்பதற்கு ஏற்ப பரபரப்பாக மக்களைக் கொண்டு செல்லும் ஒரு ரியாலிட்டி ஷோ தான் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ்.

இந்த நிகழ்ச்சி ஆரம்பித்து 6 சீசன் வெற்றிகரமாக முடிந்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து 7வது சீசனாக அக்டோபர் மாதம் 8 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை துவங்க இருக்கிறது.

மேலும் இந்த நிகழ்ச்சி இவ்வளவு வெற்றிகரமாக தொடர்ந்து கொண்டிருக்கிறது என்றால் அதற்கு முழுக்க முழுக்க காரணம் தொகுத்து வழங்கக்கூடிய கமலஹாசன் அவர்களே.

அந்த வகையில் தற்போது வெளிவந்த ப்ரோமோ படி கமல்ஹாசன் டபுள் ரோலில் வந்து பிக் பாஸ் வீடு 2 ஆகிவிட்டது என்ற செய்தியை அவர் ஸ்டைலில் கொடுத்திருக்கிறார்.

அத்துடன் கடந்த 5,6 சீசன்களில் புதுமுக போட்டியாளர்களை இறக்கி மக்களை அதிக அளவில் கன்பியூஸ் பண்ணதால் எதிர்பார்த்த அளவுக்கு விஜய் டிவிக்கு டிஆர்பி ரேட் கிடைக்கவில்லை.

இதனால் இந்த முறை அதைத் தவிர செய்து விடக்கூடாது என்பதற்காக போட்டியாளர்கள் ஒவ்வொருவரையும் சல்லடை போட்டு தேர்வு செய்து பார்ப்பவர்களை கவரும்படி தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள்.

அந்த வகையில் கிட்டத்தட்ட 18 போட்டியாளர்களை தேர்வு செய்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அவர்கள் யார் என்று தற்போது பார்க்கலாம்.

ஜாக்குலின், அம்மு அபிராமி, மாடலிங் நிலா, சோனியா அகர்வால், தர்ஷா குப்தா, ரேகா நாயர், ஷர்மிளா பஸ் டிரைவர் மற்றும் விஜே பார்வதி இப்படி 8 பெண் போட்டியாளர்கள் வருகிறார்கள்.

இவர்களுக்கு இணையாக ஆண் போட்டியாளர்களான ஸ்ரீதர் மாஸ்டர், மாடலிங் ரவிக்குமார், ரக்ஷிதா முன்னாள் கணவர் தினேஷ், கல்லூரி ஆகில், பப்லு, காக்கா முட்டை விக்னேஷ், விஜே ரக்சன், சந்தோஷ் பிரதாப், பாலிமர் செய்தியாளர் ரஞ்சித் மற்றும் அப்பாஸ் இவர்கள் அனைவரும் பிக் பாஸ் வீட்டிற்குள் இறங்கப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதில் பப்லு சமீபத்தில் தான் இளம் பெண்ணை திருமணம் செய்து இருக்கிறார். அந்த வகையில் புது பொண்டாட்டியை தவிக்க விட்டு பிக் பாஸ் வீட்டுக்குள் கும்மாளம் போட வருகிறார்.

இவர்களைத் தொடர்ந்து இன்னும் மீதமுள்ள இரண்டு போட்டியாளர்கள் சர்ப்ரைஸாக வைல்ட் கார்டு ரவுண்டில் போகப் போகிறார்கள். அந்த வகையில் இவர்கள் முக்கால்வாசி மக்களுக்கு பரிச்சயமானவர்களாகத் தான் இருக்கிறார்கள். அதனால் இவர்கள் செய்யும் ஒவ்வொரு விஷயங்களும் பார்ப்பதற்கு மிகவும் பொழுது போக்காக அமையும். வழக்கத்திற்கு மாறாக இந்த முறை சர்ச்சைக்கும், பிரச்சனைக்கும் பஞ்சமே இல்லாத அளவிற்கு சண்டை தாறுமாறாக இருக்கப் போகிறது.

Exit mobile version