Site icon Tamil News

அமேசான் பழங்குடியினருடன் ஏற்பட்ட மோதல்! இருவர் பலி, இருவர் மாயம்- நடந்தது என்ன?

உலகின் மிகப்பெரிய தனிமைப்படுத்தப்பட்ட பழங்குடியினராகக் கருதப்படும் மாஷ்கோ பைரோ மக்கள் , நீண்ட காலமாக வெளி உலகத்துடன் தொடர்பைத் தவிர்த்து வருகின்றனர்.

இந்நிலையில் திடீரென காட்டைவிட்டு வெளியில் வந்த காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த வியாழனன்று, பெரு நாட்டிலுள்ள Madre de Dios என்னும் பகுதியில், அமேசான் காடுகளில் மரம் வெட்டச் சென்றவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்கள் ஆதிவாசிகள்.

வில், அம்பு கொண்டு அவர்கள் தாக்கியதில், மரம் வெட்டச் சென்ற இரண்டு பேர் உயிரிழந்துள்ளார்கள், ஒருவர் காயமடைந்துள்ளார்.

அத்துடன், மரம் வெட்டச் சென்றவர்களில் மேலும் இருவரைக் காணவில்லை.

பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ள இந்த சம்பவம் தொடர்பாக, கலாச்சார அமைச்சகம் திங்கள்கிழமை இரவு இந்த சம்பவம் குறித்து அறிக்கை அளித்தது மற்றும் வழக்கறிஞர் அலுவலகம் மற்றும் காவல்துறையினருடன் சேர்ந்து விசாரணை நடத்தி வருவதாகக் கூறியது.

பாதுகாக்கப்படவேண்டிய அந்த பூர்வக்குடியினரை பாதுகாப்பதற்காக, அந்த பகுதிகளில் மரம் வெட்டுவதற்கு உடனடியாக தடை விதிக்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பழங்குடியினரின் பிரதேசத்தின் ஒரு பகுதியான பரிமனு ஆற்றுக்கு அருகிலுள்ள பகுதியில் இந்த மோதல் நிகழ்ந்ததாக முன்னோடி பழங்குடி அமைப்பான FENAMAD திங்களன்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும் அவர்கள் வெளியே வரவில்லை. மரம் வெட்டுவதற்காக காடுகளை அழிப்போர், மரங்களை வெட்டி வெட்டி, அந்த ஆதிவாசிகளின் வீடுவரை சென்றுவிட்டார்கள் என்பது அதன் பொருள் என்று கூறியிருந்தார்கள் சமூக ஆர்வலர்கள்.

தாங்கள் வாழும் இடத்துக்கே வெளியாட்கள் வந்துவிட்டதால் கோபமடைந்துள்ள அந்த ஆதிவாசிகள், தங்கள் கோபத்தை வெளிப்படுத்தவே, தங்கள் வழக்கத்துக்கு மாறாக தாங்கள் வாழும் அடர்ந்த காட்டைவிட்டு வெளியே வந்துள்ளார்கள் என்றும் அவர்கள் கூறியிருந்தார்கள்.

Exit mobile version