Site icon Tamil News

இலங்கையில் அரிசி விலையில் ஏற்படவுள்ள மாற்றம்!

இலங்கையில் கட்டுப்பாட்டு விலைக்கு அதிகமாக கீரி சம்பா அரிசி விற்பனை செய்யப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சிறிய மற்றும் நடுத்தர ஆலை உற்பத்தியாளர்களின் ஊடக சந்திப்பின் போதே உற்பத்தியாளர்கள் இவ்வாறு குற்றஞ்சாட்டி உள்ளனர்.

ஆலை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் யூ.கே.செமசிங்க தொடர்ந்து தெரிவிக்கையில், கீரி சம்பா அரிசி கட்டுப்பாட்டு விலையான 280 ரூபாவை விட 380 ரூபா மற்றும் 400 ரூபாவுக்கு விற்பனை செய்வதாக குற்றசாட்டு முன்வைத்தார்.

இது குறித்து நுகர்வோர் அதிகார சபை முறைப்பாடு செய்யவில்லையென அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்நிலை தொடர்ந்து நீடிக்கும் போது ஏனைய அரிசி வகைகளின் விலை அதிகரிக்கலாம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version