Site icon Tamil News

நிலவில் ஏற்பட்டுள்ள மாற்றம் – பூமியின் நிலை தொடர்பில் நாசா ஆய்வாளர்கள் விளக்கம்

பூமியின் முறையான சுழற்சியை மற்றும் இயக்கத்திற்கு நிலவு பெரும் பங்காற்றுகிறது. நிலவின் ஈர்ப்பு விசை காரணமாகவே கடலில் அலைகள் ஏற்படுகின்றன. எனவே பூமியின் இயக்கத்திற்கு நிலவின் தேவை உள்ளது. ஆனால் நிலவில் ஏற்படும் நில அதிர்வுகள் காரணமாக சந்திரன் கொஞ்சம் கொஞ்சமாக சுருங்கி சுருங்கி வருவது தெரியவந்துள்ளது. இதை நாசா விஞ்ஞானிகளும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

பலநூறு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த நிலவுடன் தற்போதைய நிலவை ஒப்பிடுகையில், அதன் அளவு படிப்படியாக குறைந்து வருவது தெரியவந்துள்ளது. சமீபத்தில் செய்யப்பட்ட மதிப்பீடுகளின் படி நிலவின் மையப்பகுதி 50 மீட்டர் வரை சுருங்கிவிட்டதாக சொல்லப்படுகிறது. நாசாவின் அப்போலோ பயணங்களில் கைப்பற்றப்பட்ட நிலவின் படங்களை ஆய்வு செய்வது மூலமாக விஞ்ஞானிகள் இதைக் கண்டுபிடித்தனர்.

இப்படி கொஞ்சம் கொஞ்சமாக சுருங்கி, நிலவு இல்லாமல் போனால் என்ன ஆகும்? பூமியின் கதி அவ்வளவுதானா?

நிலவு இல்லாமல் போகும் நிகழ்வு என்பது உடனடியாக நடக்கக் கூடியது அல்ல. எனவே இதைப்பற்றி நாம் பெரிதாக கவலைப்பட வேண்டியதில்லை. ஒருவேளை நிலவு இல்லாமல் போனால் அதனால் பூமியில் ஏற்படும் விளைவுகள் பயங்கரமாக இருக்கும் என சொல்லப்படுகிறது. அதாவது பூமியின் சுழற்சி வேகத்தை கட்டுப்படுத்தும் நிலவு இல்லை என்றால், பூமி வேகமாக சுழலத் தொடங்கும்.

இது பூமியில் பேரழிவுகளை ஏற்படுத்தலாம் என்ற நம்பிக்கைகள் உள்ளது. இருப்பினும் விஞ்ஞானரீதியாக இது உண்மை இல்லை என ஒரு தரப்பினர் கூறுகின்றனர். சந்திரன் இல்லை என்றாலும் பூமியின் சுழற்சி வேகம் எந்த வகையிலும் பாதிக்கப்படாது. இதனால் சிறிய மாற்றங்கள் இருக்குமே தவிர பாதிப்புகள் எதுவும் இருக்காது என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

நிலவு இல்லாமல் போனால் பூமியில் ஏற்படும் முதல் மாற்றம் கடல் அலைகளில் ஏற்படும் தாக்கம்தான். சந்திரனின் ஈர்ப்பு விசை காரணமாகவே பூமியின் மேற்பரப்பில் உள்ள தண்ணீரில் அலைகள் ஏற்படுகின்றன. இதனால் கடல் சூழலில் குறிப்பிடத்தக்க விளைவுகளுக்கு வழிவகுக்கும். மேலும் சூரியன் மற்றும் சந்திரனின் அலை சக்திகளை பூமி இத்தனை நாட்களாக பெற்று பழகிவிட்டதால், திடீரென அவை இல்லாமல் போனால் கிரகத்தின் சமநிலை சீர்குலைந்து அது ஒரு விதமான மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது விஞ்ஞானிகளின் கருத்தாக உள்ளது.

இருப்பினும் இத்தகைய நிகழ்வு நடப்பதற்கு இன்னும் பல மில்லியன் ஆண்டுகள் ஆகலாம். எனவே இப்போது இதைப்பற்றி நாம் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை.

Exit mobile version