Site icon Tamil News

ஜெர்மனியில் ஏற்பட்ட மாற்றம் – இறப்பு விகிதம் வீழ்ச்சி

ஜெர்மனி நாட்டில் இறப்பு விகிதம் குறைவடைந்து இருப்பதாக புள்ளி விபரம் வெளியாகியுள்ளது.

ஜெர்மனியில் 2023 ஆம் ஆண்டை 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் பொழுது இறந்தவர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

அதாவது 2023 ஆம் ஆண்டு இறந்தவர்களின் எண்ணிக்கையானது 1.02 மில்லியனுக்கும் சற்று குறைவாக உள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்நிலையில் 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் பொழுது இது 4 சதவீதமாக குறைவாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் பொழுது 45000 பேர் குறைவாக இறந்துள்ளதாக புள்ளி விபரத்தில் தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது.

இதேவேளையில் கொவிட் காலங்களான 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் ஜெர்மனியில் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புதிதாக வெளியாகியுள்ளது புள்ளி விபரத்தில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதாவது 2022 ஆம் ஆண்டு இறந்தவர்களின் எண்ணிக்கையானது 1.02 மில்லியன் காணப்பட்டுள்ளதாக புள்ளி விபரத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

Exit mobile version