Site icon Tamil News

இலங்கையில் அநுரவின் உத்தரவால் ஏற்பட்ட மாற்றம் : முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரின் அதிரடி நடவடிக்கை!

விபத்து இடம்பெற்று இரண்டு வருடங்களின் பின்னர் தான் பயன்படுத்திய சொகுசு வாகனத்திற்கான நட்டஈட்டை அண்மையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் செலுத்தியுள்ளமை அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இலங்கையின் ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து பல்வேறு சுவாரஸ்யமான சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன. அந்தவகையில் இரண்டு வருடங்களின் பின்னர் அமைச்சர் ஒருவர் தனது நஷ்ட ஈட்டு தொகையை செலுத்தியுள்ளார்.

இது தொடர்பில் விளக்கமளித்த மேல்மாகாண சபையின் செயலாளர் எஸ்.எல். தம்மிகா  மேல் மாகாண சபைக்கு சொந்தமான சொகுசு வாகனம் விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்  சஹான் பிரதீப் விதான கடந்த 24ஆம் திகதி மாகாண சபைக்கு 53.38 இலட்சம் ரூபாவை செலுத்தியதாக   தெரிவித்துள்ளார். .

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஹான் பிரதீப் விதான கம்பஹா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராக இருந்த போது அவரின் பாவனைக்காக இந்த வாகனம் வழங்கப்பட்டது.

மேல் மாகாண சபையின் முன்னாள் சுகாதார அமைச்சர் பயன்படுத்திய சொகுசு கார்  சஹான் பிரதீப் விதானவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு பெறப்பட்ட இந்த அதி சொகுசு கார் 2022 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் ஒரு நாள் பத்தரமுல்லை பெலவத்தை இசுருபாயவிற்கு அருகில் விபத்துக்குள்ளானது.

இதனைத் தொடர்ந்து காப்புறுதி பணமாக 13 மில்லியன் ரூபாய் பெறப்பட்டுள்ளது. இருப்பினும் வாகனத்தை சரி செய்வதற்கு கணிசமான பணமே செலவிடப்பட்டதாகவும் எஞ்சிய தொகையை மீள் செலுத்துமாறு கோரப்பட்டபோதும் அவர் அதனை புறக்கணித்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையிலேயே அவர் தற்போது அந்த பணத்தை செலுத்தியுள்ளார்.

Exit mobile version