Tamil News

கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாயலத்தின் வருடாந்த திருவிழா இன்று ஆரம்பம்!

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா இன்று (23) மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

கொடியேற்றத்தை அடுத்து சிலுவைப் பாதை, நற்கருணை ஆராதனை மற்றும் திருச்சொரூப பவனி ஆகியன இடம்பெற்றன. திருப்பலி நிகழ்வு நாளை (24) காலை ஒப்புக்கொடுக்கப்பட்டு திருவிழா நிறைவு பெறும்.

இத்திருவிழாவிற்கு பெருமளவு பக்தர்கள் வருகை தந்ததுடன் குறித்த நிகழ்வில் உணர்வுபூர்வமாக கலந்து கொண்டனர்.

இத்திருவிழாவில் பக்தர்களின் நலன் கருதி சுகாதார வசதிகள் போக்குவரத்து ஒழுங்குகள், உணவு வசதிகள் என்பன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை, இன்றைய தினம் ஆரம்பமாகும் கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்க போவதில்லை என தமிழக தரப்பினர் அறிவித்துள்ளனர்.

இலங்கையில் இந்திய மீனவர்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்படுகின்றமையை கண்டித்தும், கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரியும் தமிழக மீனவர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

Exit mobile version