Site icon Tamil News

பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாக அறிவிப்பு!

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தைக் கலைக்க ஜனாதிபதி ஆரிப் ஆல்வி உத்தரவிட்டுள்ளார்.

பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் பரிந்துரையின் படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொதுத் தேர்தலுக்கு வழிவகுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் சட்டப்பிரிவு 58 கீழ் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கான அறிவிக்கை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதைத்தொடர்ந்து தற்போதைய அரசின் பதவிக்காலமும் முடிவுக்கு வருகிறது.

தொகுதி மறுசீரமைப்பு போன்ற பிரச்சினைகளால் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் உள்ளது.

இந்த நிலையில் இடைக்கால அரசு அமைக்க எதிர்க்கட்சியினருடன் ஆலோசனை நடத்தி வருவதாக பதவி விலக உள்ள ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.

Exit mobile version