Site icon Tamil News

சிங்கப்பூரில் வெளிநாட்டவர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்திய அறிவிப்பு

சிங்கப்பூரில் உள்ள கடை ஒன்றுக்கு வெளியே ஒட்டப்பட்ட வேலைவாய்ப்பு அறிவிப்பினால் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த போஸ்டரில் வழக்கத்திற்கு மாறான நிபந்தனைகள் இருந்தது பேசும் பொருளாக மாறியுள்ளது.

பெரும்பாலும் சீன மொழியில் எழுதப்பட்ட அந்த வேலைவாய்ப்பு போஸ்டரில் திருமணமானவர்களை மட்டுமே வேலைக்கு அமர்த்த விரும்புவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து அந்த ஹார்ட்லேண்ட் கடை உரிமையாளரிடம் மதர்ஷிப் தளம் கேட்டதற்கு, திருமணமாகாதவர்களுக்கு எதிராக எங்களுக்கு எந்த கருத்து வேறுபாடுகளும் இல்லை என்று அவர் தெளிவுபடுத்தினார்.

அப்படியானால், உங்கள் கடையில் திருமணமானவர்களை மட்டும் வேலைக்கு தேடுவதற்கான காரணம் என்ன? என்ற கேள்வி எழுந்தது.

இப்போதெல்லாம் “இளைஞர்கள்” “பக்குவம் இல்லாமல் இருப்பதாக உரிமையாளர் கூறினார். “குறிப்பாக அவர்கள் 2000இல் பிறந்தவர்கள்” என்று குறிப்பிட்ட அவர், “வேலையில் இருக்கும் போது அவர்களால் தங்கள் கைப்பேசிகளைப் பயன்படுத்தாமல் இருக்க முடியாது” என கூறினார்.

அது ஒரு மளிகைக் கடை, இதற்கு முன்னர் பல இளைய வயது ஊழியர்களை வேலைக்கு பணியமர்த்தி ஏமாற்றமடைந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார். ஆகையால் “பக்குவமுள்ள” ஊழியர்களை வேலைக்குத் தேட முடிவு செய்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிங்கப்பூரர்கள் மற்றும் நிரந்தவாசிகள் ஆகியோரைத் தேடுவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. அவர் இப்போது மலேசியர்களையும் வேலைக்கு எடுப்பதாகவும் கூறியுள்ளார்.

Exit mobile version