Site icon Tamil News

வடகிழக்கு நைஜீரியாவில் விறகு சேகரிக்க சென்ற 200 பெண்கள் மாயம்!

வடகிழக்கு நைஜீரியாவில் வன்முறையால் இடம்பெயர்ந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் குறைந்தது 200 பேர் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சாட் எல்லைக்கு அருகே விறகுகளைத் தேடிக்கொண்டிருந்தபோது அவர்கள் கடத்தப்பட்டதாக நைஜீரியாவில் உள்ள ஐக்கிய நாடுகளின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கடத்தப்பட்டவர்களின் சரியான எண்ணிக்கை தெரியவில்லை, ஆனால் 200 பேருக்கு மேல் இருக்கும் என்று  என்று நைஜீரியாவிற்கான ஐ.நா மனிதாபிமான ஒருங்கிணைப்பாளர் மொஹமட் ஃபால் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் நடந்து சில காலம் இருக்கும் என்றாலும் தற்போதுதான் இந்த விடயம் வெளியில் வந்துள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது.

குறித்த பகுதியில் கடந்த 2009 முதல் இஸ்லாமிய குழுக்களுக்கும், அரசுக்கும் இடையில்  போராட்டங்கள் இடம்பெற்று வருகிறது.  இதில் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன், 02 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version