Site icon Tamil News

இன்னும் ஆரம்பிக்கவே இல்ல, அதுக்குள்ள முடிஞ்சிட்டா??

தளபதி விஜய் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில், ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக இருக்கும் ’தளபதி 68’ திரைப்படத்தின் அறிவிப்பு கடந்த சில நாட்களுக்கு முன் வெளியானது.

இந்த படத்தின் பூஜை கூட இன்னும் போடவில்லை என்பதும் படப்பிடிப்பு தொடங்க இன்னும் சில வாரங்களாகும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் மட்டுமே நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தின் வியாபாரம் அதற்குள் தொடங்கி விட்டதாக வெளிவந்திருக்கும் செய்தி கோலிவுட் திரையுலகில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது

இந்த படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் மிகப்பெரிய தொகை கொடுத்து வாங்கியுள்ளதாகவும் அதே போல் முன்னணி நிறுவனம் ஒன்று ஆடியோ உரிமையையும் பெற்று விட்டதாகவும் கூறப்படுகிறது.

நீண்ட இடைவெளிக்கு பின் விஜய்-யுவன் இணைவதால் பாடல்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

தளபதி விஜய் இந்த படத்தில் இரண்டு வேடங்களில் நடிக்க இருப்பதாகவும் சினேகா மற்றும் பிரியங்கா மோகன் நாயகிகளாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் பிரசாந்த், பிரபுதேவா உள்பட சிலர் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Exit mobile version