Tamil News

லியோவை விட தலைவர்171 படம் ஒருபடி மேலதான்… லோகேஷ் மாஸ்

லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்தின் தலைவர்171 படத்தை இயக்க கமிட்டாகியுள்ளார். இந்தப் படத்திற்கும் அனிருத் இசையமைக்கவுள்ளார்.

லியோ படத்தின் ரிலீசுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் படத்தின் ப்ரமோஷன்கள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

ஷஇந்தப் படம் சாதாரணமான கேமிராவில் படமாக்கப்பட்டு ஐமேக்ஸ் தொழில்நுட்பத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் தான் இயக்கவுள்ள அடுத்தப்படமான தலைவர் 171 படத்தின் பல காட்சிகளை இந்த ஐமேக்ஸ் தொழில்நுட்ப கேமிராவை வைத்தே சூட் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

இந்தப் படத்திலும் மனோஜ் பரமஹம்சாதான் ஒளிப்பதிவாளராக இணைந்துள்ளதாகவும் இதனால் படத்தின் தரம் மிகப்பெரிய அளவில் அமையும் என்றும் ரசிகர்களுக்கு மிகச்சிறந்த பார்வை அனுபவத்தை தலைவர் 171 படம் கொடுக்கும் என்றும் லோகேஷ் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

 

தற்போது 35 எம்எம் தொழில்நுட்பத்தில் ஏறக்குறைய அனைத்துப்படங்களும் எடுக்கப்பட்டுவரும் நிலையில், ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தை ஒருசில படங்கள் பயன்படுத்தி வருகின்றன. இதற்கான கேமராக்களை தலைவர்171 படத்தில் பயன்படுத்த உள்ளதாக லோகேஷ் தெரிவித்துள்ளது, கோலிவுட்டில் அடுத்தக்கட்டத்திற்கான முயற்சியாகவே பார்க்கப்படுகிறது. இதன்மூலம் படங்களின் தரம் மேலும் அதிகரிக்கும். கொடுக்கும் காசிற்கு சிறப்பான அனுபவத்தை ரசிகர்களும் பெற முடியும்.

Exit mobile version