Site icon Tamil News

கொரிய தீபகற்பத்தில் பதற்றம்! நீருக்கடியில் அணுவாயுத சோதனை செய்த வடகொரியா!

தென் கொரிய மற்றும் அமெரிக்க படைகள் இணைந்து நடத்திய ராணுவ பயிற்சி காரணமாக கொரிய தீபகற்பத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது.

இந்தப் பயிற்சிக்கு வடகொரியா நிச்சயமாக எதிர்வினையாற்றும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அதற்கு ஏற்றவகையில் வடகொரியாவும் பால்ஸ்டிக் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியதாக அறிவித்துள்ளது.

“ஹெய்ல்-5-23” எனப் பெயரிடப்பட்ட நீருக்கடியில் சோதனைசெய்ய பயன்படும் ஏவுகணை பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  நாட்டின் கிழக்குக் கடலில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய வடகொரிய அதிபர் கிம், தென்கொரியா, வடகொரியாவின் பிரதான எதிரி எனக் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version