Site icon Tamil News

கென்யாவில் ஒரு வாரத்தில் பத்து சிங்கங்கள் கொலை

மனித-விலங்கு மோதல் காரணமாக கென்யாவில் ஒரு வாரத்தில் பத்து சிங்கங்கள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவற்றில் ஆறு சிங்கங்கள் சனிக்கிழமை மட்டும் கொல்லப்பட்டதாக கென்யா வனவிலங்கு சேவை (KWS) தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் அந்நாட்டின் அரசாங்கத்தை கவலையடையச் செய்துள்ளதாக சர்சதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வழக்கத்திற்கு மாறாக அதிக எண்ணிக்கையிலான சிங்கங்கள்” கொல்லப்பட்டுள்ளதாக அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

ஆறு சிங்கங்கள் 11 ஆடுகளையும் ஒரு நாயையும் கொன்றதாக கென்யா வனவிலங்கு சேவையின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கென்யாவின் பழமையான சிங்கங்களில் ஒன்றான 19 வயதுடைய லூன்கிடோ, பாதுகாக்கப்பட்ட பகுதியிலிருந்து வெளியேறி, உணவு தேடி கால்நடை வளர்ப்புத் தொட்டிக்குள் நுழைந்து.

இதனையடுத்து லூன்கிடோ என்ற சிங்கம் கால்நடை உரிமையாளரால் கொல்லப்பட்டதாக, பாதுகாப்பு அமைப்பான லயன் கார்டியன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கால்நடை உரிமையாளர்களும் இந்த நேரத்தில் கால்நடைகளை இழக்காமல் இருக்க கூடுதல் விழிப்புடன் உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கென்யாவில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடும் வறட்சி நிலவுகிறது. இதனால் காட்டு விலங்குகளுக்கு உணவு கிடைப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Exit mobile version