Tamil News

கச்சத்தீவு திருவிழாவை புறக்கணிக்க தமிழக மீனவர்கள் தீர்மானம்!

கச்சத்தீவு திருவிழாவை புறக்கணிப்பதாக தமிழக மீனவர் தெரிவித்துள்ளனர்.

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களுக்கு சிறை தண்டனை விதித்து இலங்கை நீதிமன்ற நீதிபதியின் தீர்ப்பு ராமேஸ்வரம் மீனவர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இந்த தீர்ப்பை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனவும், சிறை தண்டனை விதிக்கப்பட்ட ராபர்ட், பெக்கர், மெல்வின்ஆகிய மூன்று மீனவர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி இன்று (17) ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்தில் அனைத்து விசைப்படகு மீனவ சங்கம் சார்பில் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது

இதனை முன்னிட்டு ராமேஸ்வரம் மீனவர்கள் படகுகளில் கருப்புக்கொடி கட்டி நாளை முதல் காலவரையரையற்ற பணிநிறுத்தப் போராட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

இதுதவிர, எதிர்வரும் 20ம் திகதி இராமேஸ்வரத்தில் இருந்து நடைபயணமாக சென்று இராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடவும் தங்களது மடகு உரிமம், மீனவர் அடையாள அட்டை உள்ளிட்டவைகளை ஆட்சியரிடம் ஒப்படைக்க போவதாக மீனவர் நடத்தி ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்துள்ளனர்.

பின்னர் கூட்டத்தின் முடிவில் வரும் 23,24 ஆகிய திகதிகளில் கச்சத்தீவில் நடைபெற உள்ள புனித அந்தோணியார் கோவில் திருவிழாவில் கலந்த கொள்ளாமல் தமிழக மீனவர்கள் புறக்கணிக்கப் போவதாக தெரிவித்துள்ளனர்.

 

Exit mobile version