Site icon Tamil News

டி20 உலகக்கோப்பை – இறுதிப் போட்டிக்கும் மழை அச்சுறுத்தல்

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் கடந்த 2 ஆம் திகதி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 9-வது டி20 உலகக்கோப்பை தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கிறது.

இந்த தொடருக்கான இறுதிப்போட்டி பார்படாஸில் உள்ள பிரிட்ஜ்டவுன், கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு அரங்கேறும் நிலையில், அதில் இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதவுள்ளன.

இந்நிலையில், இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் இறுதிப் போட்டிக்கு மழை அச்சுறுத்தல் நிலவுகிறது. போட்டி நடக்கும் பார்படாஸின் பிரிட்ஜ்டவுனில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் மழைப் பொழிவுக்கு அதிக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பார்படாஸ் வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல் அறிக்கையின்படி, இன்றைய தினம் வெப்பமண்டல புயல் தீவை பாதிக்கும் என்றும், பார்படாஸில் நாள் முழுவதும் மழைக்கு அதிக வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

இருப்பினும், ஐ.சி.சி டி-20 உலகக் கோப்பை 2024 இறுதிப் போட்டியின் போது வானிலை கணிப்பு மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையே நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு ரிசர்வ் டே வழங்கப்பட்டுள்ளது. ஜூன் 30 ஐ.சி.சி டி20 உலகக் கோப்பை 2024 இறுதிப் போட்டிக்கான ரிசர்வ் நாளாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version