Site icon Tamil News

T20 WC – பயிற்சி போட்டியில் இந்திய அணி வெற்றி

20 அணிகள் கலந்துகொள்ளும் 9வது டி20 உலகக்கோப்பை தொடரில், இந்திய அணி ஒரேயொரு பயிற்சி ஆட்டத்தில் வங்காளதேசத்துக்கு எதிராக இன்று களமிறங்கியது.

அதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதையடுத்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் களம் இறங்கினர். இதில் சாம்சன் 1 ரன்னில் அவுட் ஆனார்.

இதையடுத்து ரிஷப் பண்ட் களம் இறங்கினார். சிறிது நேரம் நிலைத்து நின்று ஆடிய ரோகித் 23 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து பண்ட் உடன் சூர்யகுமார் யாதவ் ஜோடி சேர்ந்தார்.

இதில் அதிரடியாக ஆடிய பண்ட் 32 பந்தில் 53 ரன் எடுத்த நிலையில் ரிட்டையர்டு ஹர்ட் மூலம் வெளியேறினார். இதையடுத்து களம் இறங்கிய ஷிவம் துபே 14 ரன்னிலும், சூர்யகுமார் யாதவ் 31 ரன்னிலும் அவுட் ஆகினர்.

இதையடுத்து ஹர்திக் பாண்ட்யா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஜோடி சேர்ந்தனர். இதில் பாண்ட்யா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இறுதியில் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்தது. இந்தியா தரப்பில் அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 53 ரன்களும், பாண்ட்யா 40 ரன்களும் எடுத்தனர்.

இதையடுத்து 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேச அணியின் சார்பில் களமிறங்கிய வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களி அடுத்தடுத்து ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர்.

அந்த அணியில் சிறிது நிலைத்து நின்று ஆடிய ஷகிப் அல் ஹசன் 28 ரன்களும், முகமதுல்லா 40 ரன்கள் எடுத்து (ரிட்டையர்டு ஹர்ட்) வெளியேறினர்.

இறுதியில் வங்காளதேச அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 122 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணியின் சார்பில் அதிகபட்சமாக ஷிவம் துபே மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதன்மூலம் டி20 உலகக்கோப்பை தொடரின் வங்காள தேச அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் 62 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது.

Exit mobile version