Site icon Tamil News

சிட்னி தாக்குதல் – ஆஸ்திரேலிய மக்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

சிட்னி – போண்டி சந்தியில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தையடுத்து இரத்ததானம் செய்யுமாறு ஆஸ்திரேலிய செஞ்சிலுவைச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

வெஸ்ட்ஃபீல்ட் ஷாப்பிங் சென்டரில் தாக்குதல் நடத்தியவரைத் தவிர, 6 பேர் படுகொலை செய்யப்பட்டனர், மேலும் மருத்துவமனையில் மூன்று பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.

ஒன்பது மாதக் குழந்தையும் அதற்குள் உள்ளடங்குகிக்னறது. 8 பேரின் உடல்நிலை சீராக உள்ளது மேலும் ஒரு பெண் மருத்துவமனையில் இருந்து வெளியேறியுள்ளார்.

ஆஸ்திரேலிய செஞ்சிலுவை சங்க லைஃப் ப்ளட் பிரதிநிதிகள், இந்த நேரத்தில் இரத்த தானம் செய்வது பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவைக் காட்டுவதற்கான ஒரு வழியாகும்.

O நெகட்டிவ் இரத்தத்திற்கு அவசர காலங்களில் அதிக தேவை உள்ளது, ஏனெனில் இது எந்த நோயாளிக்கும் அவர்களின் இரத்த வகையை அறிந்து கொள்வதற்கு முன்பே அவர்களுக்கு பாதுகாப்பாக கொடுக்கக்கூடிய இரத்த வகையாகும்.

மூன்று பேரில் ஒருவருக்கு அவர்களின் வாழ்வின் ஒரு கட்டத்தில் இரத்தம் தேவைப்பட்டாலும், 30 ஆஸ்திரேலியர்களில் ஒருவர் மட்டுமே இரத்த தானம் செய்பவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version