Site icon Tamil News

கொக்கோயின் கடத்தலின் மையமாக மாறும் சுவிட்சர்லாந்து!

சர்வதேச அளவில் கொக்கோயின் கடத்தலுக்கு, சந்தேகமில்லாத மையமாக சுவிட்சர்லாந்து  துறைமுகம் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.

சுவிஸ் நகரமான பாசல் மற்றும் ரைன் நதியில் உள்ள துறைமுகங்கள் போதைப்பொருள் நுழைவுக்கான முக்கிய வழித்தடங்களாக காணப்படுகிறது.

வடக்கு ஐரோப்பிய துறைமுகங்கள் வழியாக வரும் கொக்கோயின் போதைப் பொருட்கள் இவ்வழியாகத்தான் பிற ஐரோப்பிய நாடுகளுக்குள் பிரவேசிக்கின்றன.

இந்நிலையில்  2023 ஆம் ஆண்டில், சுமார் 5,000 கப்பல்கள்,  120,000 கொள்கலன்களை ஏற்றிக்கொண்டு இந்த துறைமுகங்கள் வழியாக வேறு நாடுகளுக்கு சென்றுள்ளதாக தரவுகள் குறிப்பிட்டுள்ளன.

ஆனால் துரதிஷ்ட வசமாக இவ்வாறாக செல்லும் அனைத்து கப்பல்களையும் சோதனை செய்வது இயலாத காரியம் என அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.

சமீபகாலப்பகுதியில் சுவிஸ் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கொக்கோயின் பயன்பாடு பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.

கடந்த 2020 ஆம் ஆண்டில் 211 டன்னாக இருந்த கொக்கோயின் பயன்பாடு 2021 இல் 303 டன்னாக மாறியுள்ளதாக அறிக்கையொன்று சுட்டிக்காட்டியுள்ளது.

பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல் முக்கியமாக கொள்கலன்கள் மூலம் நடைபெறுகிறது. ஐரோப்பாவின் இரண்டாவது பெரிய துறைமுகமான ஆண்ட்வெர்ப்பில் மட்டும் கடந்த ஆண்டு 116 டன் கொக்கைன் கைப்பற்றப்பட்டது.

இறக்குமதி செய்யப்பட்ட மருந்துகளில் 10% முதல் 20% வரை மட்டுமே அவர்கள் தடுத்து நிறுத்தியதாக அதிகாரிகள் மதிப்பிடுகின்றனர்.

Exit mobile version