Tamil News

உஸ்பெகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதியின் மகள் தொடர்பில் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள சுவிஸ்

உஸ்பெகிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதியின் மகள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாக சுவிட்சர்லாந்தின் பெடரல் சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.குறித்த நபர் லஞ்சம் வாங்கியதாகவும், தி ஆபீஸ் என்ற புனைப்பெயரில் குற்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கும் அமைப்பு ஒன்றையும் அவர் நடத்தி வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.

உஸ்பெகிஸ்தானில் 1991 முதல் 2016 வரையில் ஜனாதிபதியாக இருந்தவர் இஸ்லாம் கரிமோவ். இவரது மகள் Gulnara Karimova என்பவரே தொலைத்தொடர்பு நிறுவனங்களிடம் இருந்து நூற்றுக்கணக்கான மில்லியன் டொலர்கள் மதிப்பிலான லஞ்சம் பெற்றதாகக் கூறப்படுகிறது.ஆனால் இந்த விவகாரத்தில் தமக்கு எவ்வித தொடர்பும் இல்லை என குல்னாரா கரிமோவா மறுத்துள்ளார். பல நாடுகளில் உள்ள வங்கிகளில் பணம் திரட்டப்பட்டு, இறுதியில் சுவிஸ் வங்கிக்கணக்கில் அனுப்பப்படுவதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Daughter of former Uzbek president indicted on corruption charges | Euronews

மேலும், இந்த லஞ்ச விவகாரத்தில் பல மில்லியன் டொலர்கள் புழங்கியுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன் 340 மில்லியனுக்கும் அதிகமான சுவிஸ் பிராங்குகள் உஸ்பெகிஸ்தானுக்குத் திருப்பி அனுப்பப்படும் நோக்கில் ஏற்கனவே பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.மேலும், கரிமோவா மற்றும் மற்றொரு குற்றவாளிக்கு எதிரான நடவடிக்கைகளில் 440 மில்லியன் பிராங்குகளுக்கும் அதிகமான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கரிமோவா ஒரு காலத்தில் வெற்றிகரமான தொழிலதிபராகவும், உஸ்பெகிஸ்தானுக்கான ஐக்கிய நாடுகளின் பிரதிநிதியாகவும் செயல்பட்டுள்ளார்.கரிமோவா தற்போது உஸ்பெகிஸ்தானில் சிறையில் உள்ளார், 2015ல் மோசடி மற்றும் மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டில் ஐந்தாண்டு சிறைத்தண்டனை பெற்ற பின்னர் தனது வீட்டுக் காவலின் விதிமுறைகளை மீறியதற்காக 2019ல் சிறையில் அடைக்கப்பட்டார்.

தற்போது சுவிஸ் அதிகாரிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளை கரிமோவா எதிர்கொள்வார் எனவும், இந்த குற்றச்சாட்டுகளில் இருந்து அவர் விடுவிக்கப்படுவார் எனவும் அவரது சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

Exit mobile version