Site icon Tamil News

நெதர்லாந்தில் நீரில் விழுந்தவரை காப்பாற்ற முயன்ற ஈழத் தமிழ் இளைஞனுக்கு நேர்ந்த துயரம்

நெதர்லாந்தின் உத்ரெக் மாகாணத்தில் Vinkeveense Plassen ஏரியில் நீச்சலில் ஈடுபட்டிருந்த இலங்கை தமிழ் இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

திங்கட்கிழமை இரவு ஒன்பது மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அம்ஸ்ரர்டாமில் வசிக்கும் 21 வயதான அனுசன் என்பவரே உயிரிழந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

நண்பர்கள் குழு ஒன்றுடன் Utrecht வின்கெவீன்ஸ பிளெசென் நீரேரிப் பகுதிக்கு சென்றிருந்த போது அவர் நீரில் மூழ்கிக்காணாமற்போனார் என்று தெரிவிக்கப்படுகிறது.

பிரான்ஸில் இருந்த வந்திருந்த நண்பர்களில் ஒருவர் நீரேரியில் சிக்குண்ட வேளை அவரை மீட்டுப் பாதுகாப்பாக வெளியேற்ற முயன்ற சமயத்திலேயே அனுசன் நீரில் மூழ்கிக் காணாமற்போனார் என்று சம்பவத்தை நேரில் கண்டவர்கள் கூறியிருக்கின்றனர்.

ஏரியில் மீட்புப் பணியாளர்கள் நீண்ட நேரம் தேடுதல் நடத்தியபிறகே அவரது உடலைக் கண்டுபிடித்து மீட்டனர் என்றும், கரைக்கு கொண்டுவரப்பட்டு அவசர முதலுதவிச் சிகிச்சை அளிக்கப்பட்ட போதும் அவரது உயிரைக் காப்பாற்ற முடியாமற்போனது என்றும் மீட்புப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பிரான்ஸில் இருந்து சென்றிருந்த 25 வயதான இளைஞர் நீரில் இருந்து மீட்கப்பட்ட போதிலும் சுயநினைவு திரும்பாத நிலையில் மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டிருக்கிறார்.

இளைஞர்கள் ஒர் அணியாகப் பிறந்த நாளைக் கொண்டாடுவதற்காகவே நீரேரிப் பகுதிக்குச் சென்றிருந்தனர். அந்தச் சமயத்திலேயே இந்த அவலம் நேர்ந்தது என்று நெதர்லாந்துத் தமிழர் தரப்புத் தகவல் ஒன்று தெரிவித்தது.

Exit mobile version