Tamil News

மெகா படத்தில் மீண்டும் இணையும் சூர்யா மற்றும் மாதவன்?

மணிரத்னத்தின் ‘ஆயுத எழுத்து’ படத்தில் சூர்யா மற்றும் மாதவன் இருவரும் இணைந்து நடித்திருந்தனர்.

இப்போது சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கும் ‘சூர்யா 43’ படத்தில் ஒரு முக்கிய கேரக்டருக்காக மாதவனை அணுகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பான் இந்திய நட்சத்திரம் தனது ஒப்புதலை வழங்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக வட்டாரங்கள் கூறுகின்றன. காரணம், சூர்யாவுடனான நட்பு மட்டுமல்ல, இயக்குனர் சுதாவுக்கும் ‘இறுதி சுற்று ‘ படம் மூலம் நெருக்கமானவர்.

‘சூர்யா 43’ படத்திற்கு ஜி.வி இசையமைக்கிறார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

மாதவன் தற்போது சஷிகாந்த் இயக்கத்தில் நயன்தாரா, மீரா ஜாஸ்மின், சித்தார்த் ஆகியோர் நடிக்கும் ‘டெஸ்ட்’ படத்தில் நடித்து வருகிறார். அஜய் தேவ்கனும் நடிக்கும் ஒரு சூப்பர்நேச்சுரல் த்ரில்லரில் ஜோதிகாவுடன் அவர் இணைகிறார். சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா ‘கங்குவா’ படப்பிடிப்பில் ஈடுபட்டு வருகிறார், அதன் பிறகு வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வாடிவாசல்’ படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Exit mobile version