Site icon Tamil News

சர்வதேச திரைப்பட விழாவில் இடம்பிடித்த சூரியின் ‘விடுதலை’!

புனேவில் நடைபெற உள்ள சர்வதேச திரைப்பட விழாவில் நடிகர் சூரி நடித்துள்ள ‘விடுதலை’ உட்பட 3 தமிழ் படங்கள் திரையிட தேர்வு செய்யப்பட்டுள்ளன.

22-வது சர்வதேச திரைப்பட விழா புனேவில் ஜனவரி 18 முதல் 25ம் திகதி வரை நடைபெறவுள்ளது. இந்த திரைப்பட விழாவில் உலகின் சிறந்த திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. இந்த விழாவுக்கு தேர்வான தமிழ்ப் படங்கள் குறித்து தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது

இந்த விழாவில் திரையிட இயக்குநர் வெற்றிமாறனின் இயக்கத்தில் நடிகர் சூரி நடித்துள்ள ‘விடுதலை’ திரைப்படம் திரையிடப்பட உள்ளது. அதேபோல இயக்குனர் சீனு ராமசாமியின் ‘இடி முழக்கம்’, இயக்குனர் ஜெயப்பிரகாஷின் ‘காதல் என்பது பொதுவுடமை’ ஆகிய தமிழ்ப் படங்களும் தேர்வாகியுள்ளன.

அதேபோல், மலையாள மொழியில் இருந்து மம்முட்டி, ஜோதிகா நடிப்பில் வெளியான ‘காதல் தி கோர்’, ஜோஜி ஜார்ஜ் நடித்த ‘இரட்டா’ ஆகிய இரண்டு படங்களும் திரையிடப்படவுள்ளன.

Exit mobile version