Tamil News

முதன்முறையாக தமிழில்… சன்னி லியோனுக்கு அடித்த அதிஷ்டம்

பஞ்சாபி தம்பதிக்கு கனடாவில் பிறந்த நடிகை சன்னி லியோன் முதலில் ஆபாச நடிகையாக அறியப்பட்டார். பிறகு அதிலிருந்து ஒதுங்கி படங்களில் நடிக்க ஆரம்பித்தார். இந்தச் சூழலில் அவர் M Tvயில் ஒளிபரப்பாகும் ஸ்ப்லிட்ஸ் வில்லாவின் 15ஆவது சீசனை தொகுத்து வழங்கவிருக்கிறார்.

கனடாவில் பிறந்தவர் சன்னி லியோன். ஜெர்மன் பேக்கரியில் வேலை பார்த்துவந்த நிலையில் ஆபாச படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் அவர் நடித்ததால் உலகம் முழுவதும் ஃபேமஸ் ஆனார்.

ஒருகட்டத்தில் ஆபாச திரைப்பட உலகில் இருந்து ஒதுங்கிய சன்னி லியோன் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

2011ஆம் ஆண்டு ஹிந்தி பிக்பாஸில் கலந்துகொண்டார். பிக்பாஸிலிருந்து வெளியே வந்த பிறகு ஜிஸ்ம் 2வில் நடித்தார். அந்தப் படத்துக்கு பிறகு ஏராளமான ஹிந்தி பட வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தன.

ஹிந்தி மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, கன்னடத்திலும் அவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தன. அதன்படி தமிழில் முதன்முறையாக, வடகறி திரைப்படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடினார். அவர் நடனம் ஆடுகிறார் என்பதே அந்தப் படத்துக்கு பெரிய விளம்பரமாக இருந்தது.

அந்தப் படத்துக்கு பிறகு ஓ மை கோஸ்ட், தீ இவன் உள்ளிட்ட படங்களில் நடித்தார். அடுத்ததாக கொட்டேஷன் கேங் வீரமாதேவி உள்ளிட்ட படங்களிலும் நடித்துவருகிறார்

இந்நிலையில் M Tvயில் ஒளிபரப்பாகும் பிரபல நிகழ்ச்சியான ஸ்ப்லிட்ஸ் வில்லாவின் 15ஆவது சீசனை சன்னி லியோன் தொகுத்து வழங்கவிருக்கிறார். அவருடன் தனுஜ் விர்வானியும் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.

மேலும் அந்த நிகழ்ச்சி இம்முறை தமிழிலும் டெலிகாஸ்ட் ஆகும் என்று சேனல் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஸ்ப்லிட்ஸ் வில்லா என்பது ஒரு ரியாலிட்டி ஷோவாகும்.

அதாவது பத்து ஆண்கள், பத்து பெண்கள் ஒரு வில்லாவுக்குள் சென்று தங்களுக்கு சரியான ஜோடியை தேர்ந்தெடுப்பதுதான் சாராம்சம் ஆகும்.

பல போட்டிகள் இதற்காக நடத்தப்படும். ஷோவின் முடிவில் இரண்டு பேர் வெற்றியாளர்களாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

Exit mobile version