Site icon Tamil News

சீனாவில் அதிகரித்து வரும் தற்கொலை சம்பவங்கள்!

சீனாவில் சமீபத்திய ஆண்டுகளில் இளைஞர்களிடையே தற்கொலைகள் அதிகரித்து வருவதாக அறிக்கையொன்று வெளியாகியுள்ளது.

சீனாவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் சமீபத்திய ஆய்வு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

ஆய்வின்படி கடந்த 2010 முதல் 2021 வரை தற்கொலை செய்து கொள்ளும் ஐந்து முதல் 14 வயது வரையிலான குழந்தைகளின் எண்ணிக்கை  10% உயர்ந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதேபோல் 15 முதல் 24 வயதிற்குட்பட்டவர்களின் எண்ணிக்கை 2017 இல் 7% சரிந்தது, அடுத்த நான்கு ஆண்டுகளில் கிட்டத்தட்ட 20% அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

குழந்தைகள் மற்றும் இளம்பருவத்தினர் கடுமையான மனநலக் கோளாறுகளை எதிர்கொண்டுள்ளனர் எனவும் பாடசாலையில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற போட்டி மனப்பான்மை தற்கொலை சம்பவங்களை அதிகரிக்க வாய்ப்பாக அமைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version