Site icon Tamil News

தரமற்ற மருந்து இறக்குமதி: கெஹலிய ரம்புக்வெல்ல மீண்டும் விளக்கமறியலில்

தரமற்ற இம்யூன் குளோபுலின் தடுப்பூசிகளை இறக்குமதி செய்த குற்றச்சாட்டில் தொடர்புடைய முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

வழக்கில் தொடர்புடைய மூன்று (03) சந்தேகநபர்களுடன் ரம்புக்வெல்ல ஆகஸ்ட் 22 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக சந்திரகுப்த மற்றும் அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர் டொக்டர் சமன் ரத்நாயக்க ஆகியோருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

பிரதிவாதிகள் இன்று (ஆகஸ்ட் 08) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இரண்டு சிரேஷ்ட அரச அதிகாரிகளின் உதவியுடன் போலியான ஆவணங்களை உருவாக்கி மருந்து நிறுவனம் ஒன்று தரமற்ற இம்யூன் குளோபுலின் தடுப்பூசிகளின் 22,500 குப்பிகளை இறக்குமதி செய்ததாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்ததை அடுத்து கெஹலிய ரம்புக்வெல்ல உட்பட சுகாதார அமைச்சின் அதிகாரிகள் பலர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

Exit mobile version