Site icon Tamil News

சீனாவில் வைரலாகி வரும் ‘Street Girlfriends’ ட்ரெண்ட் …

சீனாவில் சமூக வலைதளங்களில், பல புதுப்புது நிகழ்வுகளை நாம் அன்றாடம் கண்டுகொண்டுதான் இருக்கிறோம். இந்நிலையில் சீனாவில் சமீபத்தில் ட்ரெண்டாகி உள்ளது மற்றொரு வீடியோ.

அதில் வரும் இளம்பெண்ணின் செயல் காண்போரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அதே சமயம் அது சர்ச்சையையும் ஏற்படுத்தி உள்ளது. அந்த வீடியோவின்படி சீனாவின் நகர வீதி ஒன்றில், ஸ்டால் ஒன்றை அமைத்து அதில் ஒரு அட்டையில் காதலையும் மற்றொரு அட்டையில் தோழமையையும் விலை போட்டு விற்று வருகிறார் ஒரு பெண்.அதில்,

கட்டியணைப்பதற்கு ஓரு யுவான், ஒரு முத்ததிற்கு 10 யுவான், ஒன்றாக படம் பார்க்க வேண்டுமானால் 15 யுவான், வீட்டு வேலைகளை செய்துதர 20 யுவான்,ஒன்றாக மது அருந்த 40 யுவான்

என்று எழுதப்பட்டுள்ளது. சீனாவில் ஷென்சென் போன்ற இடங்களில் பல பெண்கள் இத்தகைய ஸ்டால்களை அமைத்து இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள் என்று கூறப்படுகிறது.

இது குறித்த வீடியோக்களும், புகைப்படங்களும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் சூழலில், நெட்டிசன்கள் தங்களின் எதிர் கருத்துக்களை அதில் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக “மனித உணர்ச்சிகளை இப்படி வியாபாரம் செய்தால், அது உறவுகள் மீதான நம்பிக்கையின்மைக்கு வழிவகுக்கும்” என்கின்றனர் பலரும்.

Exit mobile version