Site icon Tamil News

காசாவில் நிறுத்தப்பட்ட வெடிகுண்டுகள் சத்தம் – விடுவிக்கப்பட்ட பிணை கைதிகள்

4 நாள் போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புதல் அளித்து இருந்தது. பிணை கைதிகளை விடுவிப்பதாக இருந்தால் 4 நாள் போர் நிறுத்தம் என்றும், பிணை கைதிகள் கூடுதலாக விடுவிக்கப்பட்டால் போர் நிறுத்த நாட்கள் நீட்டிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து இஸ்ரேல் – ஹமாஸ் என இரு தரப்பும் போர் நிறுத்தத்தில் ஈடுபட்டனர். நேற்று முதற்கட்டமாக 24 பிணை கைதிகளை ஹமாஸ் அமைப்பு விடுவித்தது.

10 தாய்லாந்து நாட்டை சேர்ந்த பிணை கைதிகள், ஒரு பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த பிணை கைதி, 9 பெண்கள் , 4 குழந்தைகள் உட்பட 13 இஸ்ரேல் நாட்டை சேர்ந்த பிணை கைதிகள் என 24 பிணை கைதிகள் நேற்று காசா – எகிப்து எல்லையில் விடுவிக்கப்பட்டனர்.

அதே போல, இஸ்ரேல் ராணுவ கட்டுப்பாட்டில் இருந்த 7 ஆயிரம் பிணை கைதிகளில், 24 பெண்கள், 15 ஆண்கள் என மொத்தம் 39 பிணை கைதிகள் விடுவிக்கப்பட்டனர். அடுத்த 3 நாட்களுக்கு 150 பிணை கைதிகளை விடுவிப்பதாக இஸ்ரேல் ராணுவம் உறுதியளித்துள்ளது.

4 நாள் போர் நிறுத்தத்தை தொடர்ந்து வெடிகுண்டு சத்தங்கள் இல்லாமல் காசா நகரத்து மக்கள் நிம்மதி பெருமூச்சு அடைந்துள்ளனர். இதே நிலை தொடர வேண்டும் என்பதே அனைவரது விருப்பமாக உள்ளது.

Exit mobile version