Site icon Tamil News

இந்திய தொடருக்கு முன் அறுவை சிகிச்சை செய்து கொண்ட ஸ்டோக்ஸ்

இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ். ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு அறிவித்த இவர் சமீபத்தில் ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2023-ல் பங்கேற்பதற்காக திரும்ப வந்தார்.

இந்த தொடரில் அவர் ஆறு போட்டிகளில் விளையாடி, 50.66 சராசரியில் 304 ரன்களையும், ஒரு சதம் மற்றும் இரண்டு அரை சதங்களுடன் 89-க்கு மேல் ஸ்ட்ரைக் ரேட்டையும் எடுத்தார்.

அவரது சிறந்த ஸ்கோர் 108 ஆகும். அவரது முழங்காலில் உள்ள பிரச்சனையால் பேட்டிங் மட்டுமே செய்தார். பந்து வீசவில்லை.

இந்நிலையில் இந்திய டெஸ்ட் சுற்றுப்பயணத்திற்கு முன்னதாக பென் ஸ்டோக்ஸ் தனது முழங்காலில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.

அந்த சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததாகவும், தற்போது அவருக்கு மறுவாழ்வு அளிக்கும் நேரம் வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக அடுத்த வருடம் ஜனவரி மாதம் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது குறிப்பிடத்தகக்து.

Exit mobile version