Site icon Tamil News

பாலிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு வரி விதிக்க நடவடிக்கை!

பாலிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு 10 டொலர் வரி விதிக்க அந்நாட்டு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இது இன்று (14.02) முதல் அமுலுக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதேசத்தின் கலாச்சாரம் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இந்தோனேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் வரை 4.8 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் பாலிக்கு வருகை தந்துள்ளனர்.

எவ்வாறாயினும், கடந்த காலங்களில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் தவறான நடத்தைக்கு பாலி மக்கள் எதிர்ப்புத் தெரிவித்ததோடு, மத ஸ்தலங்களை அவமதித்த ரஷ்ய பிரஜை ஒருவரை நாடு கடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

போக்குவரத்து விதிமீறல் சம்பவங்கள் அதிகளவில் இடம்பெற்று வரும் நிலையில் வெளிநாட்டவர்கள் குறித்த பகுதியில் மோட்டார் சைக்கிள்களை பயன்படுத்துவதையும் தடை செய்ய அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Exit mobile version