Site icon Tamil News

இஸ்ரேலில் உயிரிழந்த இலங்கை பெண்ணின் சடலத்தை தூதரகத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை1

இஸ்ரேலில் நடைபெற்றுவரும் மோதலில் உயிரிழந்த இலங்கை பெண்ணான  அனுலா ஜயதிலகவின் சடலம் இரண்டு நாட்களுக்குள் இஸ்ரேலில் உள்ள இலங்கை தூதரகத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் பிரஜையின் அனைத்து சலுகைகளும் அந்நாட்டில் உள்ள அவரது குடும்பத்தினருக்கு வழங்கப்படும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொது முகாமையாளர் . காமினி செனரத் யாப்பா, “அவருடைய உடலை இலங்கைக்கு கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

“அதன்படி, போரில் இறக்கும் இஸ்ரேலிய குடிமகனுக்கு இணையான அனைத்து இழப்பீடுகளும் அந்த நாட்டிலிருந்து பெறப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அந்த சலுகைகள் அனைத்தும் அவரது குடும்பத்திற்கு வழங்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

Exit mobile version